சுதந்திர தின அமுத பெருவிழா


சுதந்திர தின அமுத பெருவிழா
x

கம்பைநல்லூரில் பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூரில் பா.ஜ.க. சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மொரப்பூர் மேற்கு மண்டல தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அழகு, மாவட்ட துணை தலைவர் சிவன், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சக்திவேல் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து விடுதலை சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. பின்னர் கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கார்த்திகேயன், சின்னச்சாமி, பழனிச்சாமி, மாதேஷ், இந்திரா, மாதையன், மகளிரணி நிர்வாகி புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story