சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தலைவர் வருவான் வடிவேலன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.இந்த விழாவில் கல்லூரி செயலாளர் வி.மாதவன், இயக்குனர் எம், தங்கராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் பி.மாரிமுத்து, இயக்குனர் டாக்டர் ஏ.சிவகுமார், டீன் டாக்டர் என்.சிவகுமார், நிர்வாக அலுவலர் பி.ஜெயக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சப்தகிரி கல்வி நிறுவனங்கள்

தர்மபுரி பெரியாம்பட்டியில் உள்ள சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ. கல்வி நிறுவனங்களின் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி துணைத்தலைவர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக அவர் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பீ.ஜீ. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டோலி, பத்மாவதி நர்சிங் கல்லூரி முதல்வர் செல்வி மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்மாவதி நர்சிங் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இ.ஆர்.கே. கல்லூரி

அரூர் அடுத்த எருமியாம்பட்டியில் உள்ள இ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் த.சக்தி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கண் பரிசோதனை மற்றும் முதலுதவி பயிற்சி முகாம், பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டது. விழாவில் மருந்தாளுனர் கல்லூரி முதல்வர் முத்துகுமரன், நிர்வாக அலுவலர் அருள்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.


Next Story