சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x

நல்லம்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராமவிஜயரங்கன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி அருகே லளிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வங்கி தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் வங்கி பணியாளர்கள், இயக்குனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story