சுதந்திர தின விழா பொதுக்கூட்டம்


சுதந்திர தின விழா பொதுக்கூட்டம்
x

ஐக்கிய ஜமாத் சார்பில் தொண்டியில் சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி, ஆக.16-

ஐக்கிய ஜமாத் சார்பில் தொண்டியில் சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக் கூட்டம்

தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் நகர ஜமாத்துல் உலமா சபை இணைந்து நேசம் கொண்டு தேசம் காப்போம் என்ற தலைப்பில் சுதந்திர தின பொதுக் கூட்டம் பாவோடி மைதானத்தில் நடைபெற்றது. தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா தலைமை வகித்தார். இந்திய அனைத்து ஜமாத் தலைவர்கள் சமுதாய தலைவர்கள் முன்னிலை வகித்தனர். தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் முகம்மது ஹனீப் கிராத் ஓதினார். ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் முகமது ஜலாலுதீன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட அரசு காஜியும், சிந்தாமணிப்பட்டி ஸஊதிய்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிராஜுதீன் அகமது, திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசின் மத நல்லிணக்க கோட்டை அமீர் விருது பெற்ற குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், தொண்டி சிந்தாத்திரை மாதா ஆலய பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஊர்வலம்

நிகழ்ச்சிகளை தொண்டி இறைமறை இயக்க தலைவரும் பைத்துல் மால் சொசைட்டி செயலாளருமான செய்யது அலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத்தலைவர் முகமது பாரூக், செயலாளர் ஹாலித்முகமது, தொண்டி நகர ஜமாத்துல் உலமா சபை செயலாளர் அப்துல் பாசித் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் ஜமாத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் செய்யது முகமது காசிம் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை தொண்டி ஐக்கிய ஜமாத் நகர ஜமாத்துல் உலமா சபை செய்திருந்தது. இந்நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை தொண்டி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இறைமறை இயக்கம் அறக்கட்டளை சார்பாக ஓய்வு பெற்ற பேரூராட்சிசெயல் அலுவலரும் இறைமறை இயக்கத்தின் தலைவருமான செய்யது அலி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மதரஸா மாணவர்களின் சுதந்திர தின அணிவகுப்பு ஊர்வலம் தொண்டி பெரிய பள்ளிவாசலில் தொடங்கியது. ஊர்வலத்தை தலைவர் மற்றும் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாவோடி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story