கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா


கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா
x

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சீதா மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கழுகுமலை நகர பஞ்சாயத்து தலைவர் அருணா சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்ரமணியன், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்

கழுகுமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கழுகுமலை நகர காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ், துணைத்தலைவர் ஜான் வின்சென்ட், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story