ஏரல் பகுதியில் சுதந்திர தினவிழா
ஏரல் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
ஏரல் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் தனசிங், துணைத்தலைவர் ஜான் ரத்தினபாண்டி, வார்டு கவுன்சிலர் ஜாபர் சாதிக், ஆனந்த், அன்பு நவீன், முத்துமாரி, முத்துமாலை, மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பெருங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சந்திரசேகரன், துணை தலைவர் சந்திர பால், கவுன்சிலர் வேதமாணிக்கம், பாஸ்கர், காமராஜ், செல்வகுமாரி, பட்டுப்பாண்டி, சுப்பிரமணியன், வத்ஸலா, பொன் செல்வராஜ், சவுந்தர்யா சண்முகம் சத்யா, மாயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உமரிக்காடு ஊராட்சி அலுவலகம், உமரிக்காடு தொடக்கப்பள்ளி மற்றும் ஆலடியூர் தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்றத்தின் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவருமான ராஜேஷ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சாலை ஆய்வாளர் வசந்தா, பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர், ஊர் தலைவர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி ஜெயந்தி தசரத பாண்டியன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
ஏரல் அருகே உள்ள சூலைவாய்க்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கையன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
சிவகளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரதீபா மதிவாணன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
சிவகளையில் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பிச்சையா தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிச்சைக்கண்ணு, சுப்பிரமணியன் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தையொட்டி உடன்குடி யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் கொடியேற்றினார். துணைத்தலைவர் மீரா சீராசுதீன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செட்டியாபத்து ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா கொடியேற்றினார்.
பரமன்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் தலைவர் இலங்காபதி, வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத்தில் தலைவர் ராஜரத்தினம், வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத்தில் தலைவர் பாலசரஸ்வதி ஆகியோர் கொடியேற்றினர். உடன்குடி மெயின் பஜாரில் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், தேசிய கொடி ஏற்றினார். நகர தலைவர் முத்து, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனீஷ், மகளிர் அணி தலைவி அன்புராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி அருகே மணப்பாடு கலங்கரை விளக்கு வளாகத்தில் முதன்மை அதிகாரி மதனகோபால் தேசிய கொடி ஏற்றினார். பிரபு, செந்தில்குமார் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.