கடையநல்லூர் நகராட்சியில் சுதந்திர தினவிழா
கடையநல்லூர் நகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராசையா, வார்டு கவுன்சிலர்கள் தங்கராஜ், செய்யது அலி பாத்திமா, முருகன், சந்திரா, மாலதி, ராமகிருஷ்ணன், சங்கரநாராயணன், முகமது கனி, முகமது மைதீன், மகேஸ்வரி அக்பர் அலி நிலோபர் மீராவ்பிவி, திவான் மைதீன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பொறியாளர் லதா, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன் நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மேலாளர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா இளநிலை உதவியாளர் மாரியப்பன், சாமிதுரை உட்பட நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கத்தனர்.
கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன், அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா, இலத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.
கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பா.ஜனதா கொடிக்கம்பத்தில் நகரத் தலைவர் சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றினார். கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தேசியக் கொடியை ஏற்றினார். ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் சமுத்திரம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.