குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் சுதந்திர தினவிழா
குலசேகரன்பட்டினம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி தலைவர் சொர்ணபிரியா துரை தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் ஊராட்சி துணைத்தலைவர் கணேசன், பற்றாளர் மீனா, ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூழ்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினம் தியாகிகள் நினைவு பூங்காவில் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா துரை தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
குலசேகரன்பட்டினம் பொது நூலகத்தில் வாசகர் வட்டத்தலைவர் சுடலைமணி தலைமையில் நூலகர் மாதவன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மாதவன்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் சேர்மதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
குலசேகரன்பட்டினம் நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ரகமத்துல்லா, கொம்பையா, நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.