தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திரதின விழா


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திரதின விழா
x

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

சக்தி வித்யாலயா

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயா சண்முகம் தலைமை தாங்கினார். பழைய மாணவர் சங்க தலைவர் பிரியங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்ட் மாடல் சி.பி.எஸ்.சி பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வனச்சரக அதிகாரி சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் சீனிவாசன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ராஜலட்சுமி கல்வி நிறுவனம்

தூத்துக்குடி ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.ஏ.ஆறுமுகநயினார் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். செயலாளர் ஏ.ஆறுமுகம் கிருஷ்ணகுமார் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சசிகள் நடந்தன. நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி ஆறுமுகநயினார், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள டாக்டர் சுமதி ஆறுமுகம்கிருஷ்ணகுமார், டாக்டர் சுகன்யா சம்பத்குமார், டாக்டர் ஜெயலலிதா கருப்பசாமி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் சண்முகநாராயணன் (கல்வியியல் கல்லூரி), ராஜதுரை (கலை அறிவியல்), விஜயலட்சுமி (ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்து இருந்தனர்.

செர்வைட் பள்ளி

தூத்துக்குடி அருகே உள்ள செர்வைட் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் புளோரி மற்றும் தலைமை ஆசிரியர் மெர்சி இமாக்குலேட் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரம்பள்ளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றலில் இனிமை தொடக்கப்பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவகாமி வரவேற்று பேசினார். தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் திருச்செந்தூர் சர்வதேச உரிமைகள் கழக அமைப்பின் சார்பாக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ், வக்கீல் அட்லின் ஜெயசந்திரிகா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், உதவி ஆசிரியர் சாந்தா நன்றி கூறினார்.

வரண்டியவேல்

குரும்பூர் அருகே உள்ள வரண்டியவேல் கிராமத்தில் உள்ள வரண்டியவேல் அகோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பள்ளிச் செயலர் மகராஜன் நாடார் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மகேஷ் துரைசிங், ஆசிரியர்கள், பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story