இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

சிவகிரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர குழு உறுப்பினர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதி வரை செங்கல் சூளைகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அவ்வாறு இருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகமும், வருவாய் துறையும் உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நகர துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், குருவு, மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story