இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும், பஸ் நிறுத்தம் அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் நகர செயலாளர் எல்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். குருசாமி, தங்கவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத்தலைவர் எஸ்.கே.கங்கா, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் அருள்குமார், தோவாளை தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் தாமரைசிங், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் அனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணாத்துரை நன்றி கூறினார்.


Next Story