இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பணகுடியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
பணகுடி:
பணகுடி தேரடி திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பால் நாடார் தலைமை தாங்கினார். சேசுதாசன், சுயம்பு, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா செயலாளர் கிறிஸ்டோபர், மாநில குழு உறுப்பினர் கற்பகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பணகுடி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவரை நியமிக்க வேண்டும். சீராக குடிநீர் வழங்க வேண்டும். பணகுடி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், செல்வி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story