குடியிருப்புகளை இடிக்க இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு; ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்


குடியிருப்புகளை இடிக்க இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு; ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்
x

விருதுநகர்-அழகாபுரி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையாக குடியிருப்புகளை இடித்த போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி நிறுத்தப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்-அழகாபுரி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையாக குடியிருப்புகளை இடித்த போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி நிறுத்தப்பட்டது.

நடவடிக்கை

விருதுநகர்-அழகாபுரி சாலையில் நேற்று செங்குன்றாபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர் அப்போது அப்பகுதியிலிருந்த குடியிருப்புகளை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் குடியிருப்பு பகுதியினை இடிக்கக் கூடாது என கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் செங்குன்றாபுரத்தில் திரண்டனர்.

நிறுத்தம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் குடியிருப்பு பகுதிகளை அகற்றும் போது அதற்கு முன்னால் அதில் வசிக்கும் ஏ-ழை மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு வழிகாட்டுதல்கள் இருப்பதை சுட்டி காட்டினார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவித்தனர். எனினும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் குடியிருப்பு பகுதிகளை இடிக்க கூடாது என வற்புறுத்தினர்.

மாற்று ஏற்பாடுகள் செய்த பின்பு தான் குடியிருப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியை இடிக்கும் பணியை நிறுத்தினர். இந்த பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடப்படும் என்று லிங்கம் தெரிவித்தார்.


Next Story