இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்


இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கல்விக்கொள்கையை திரும்ப பெறக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம் மேற்கொண்டனர்.

நீலகிரி

கூடலூர்,

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கல்வி மாவட்ட தலைநகரங்களில் பிரசார இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது.

இதையொட்டி கூடலூர் காந்தி திடலில் தொடங்கிய பிரசார இயக்கத்திற்கு நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சஜி வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சலீம், கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தரன், ராஜகோபால், சந்திரகுமார், அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் சனல்குமார் நன்றி கூறினார்.

இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசார மற்றும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story