இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் பிச்சைக்கனி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முருகையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். மாநில தலைவி மணிமேகலை, தலைமை ஆசிரியர் கழக சங்கரன்கோவில் கல்வி மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.


Next Story