நிலவிற்கு இந்தியர்கள் சென்றுவரும் காலம் வெகு தொலைவில் இல்லை


நிலவிற்கு இந்தியர்கள் சென்றுவரும் காலம் வெகு தொலைவில் இல்லை
x

நிலவிற்கு இந்தியர்கள் சென்றுவரும் காலம் வெகு தொலைவில் இல்லை

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்தில் தாய் அறக்கட்டளை சார்பில் தை மகளே வருக என்ற தலைப்பில் உழவு, உணவு, உணர்வு திருவிழா பல்லடம் வனாலயம் அரங்கில் நடைபெற்றது. விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

சந்திராயன்-2 நிலவின் இறுதியில் மோதியதால் மெல்ல இறங்க முடியவில்லை. சந்திராயன் மூன்றாவது விண்கலம் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. அது நிலவின் துருவ பகுதியில் இறங்கும் என்று எதிர்பார்க்கிறோம். நிலவிற்கு மனிதனை அனுப்ப பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பின்னர் பரிசோதனைகள் நடத்தப்படும். மனிதன் இருப்பது போலவே கருதி நிலவிற்கு முதலில் விண்கலத்தை அனுப்பி அது நிலவிற்கு சென்று இறங்கி பின்னர் மீண்டும் பூமி திரும்பும் வகையில் சோதனை ஒட்டம் நடத்தப்படும். அது வெற்றிகரமாக நடத்த பின்னர் நிலவிற்கு இந்தியர்கள் சென்று திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. வருங்கால தலைமுறையினருக்கு விவசாயத்தை கொண்டு செல்ல வேண்டும். நான் ஓய்வு பெற்ற நிலையில் மாணவர்களுடன் சேர்ந்து வேளாண் மண் சார்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.Next Story