இந்திய நாடார்கள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்


இந்திய நாடார்கள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் நேற்று குற்றாலம் தட்சணமாற நாடார் சங்க விடுதியில் அமைக்கப்பட்டுள்ள பா. சிவந்தி ஆதித்தனார் அரங்கத்தில், நாடார் மகாஜன சங்கத்தின் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். தென்காசி மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன் நாடார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடார் மகாஜன சங்க தேர்தல் குறித்து இங்கு ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம். தென்காசி மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக பிரித்து அந்த நிர்வாகிகள் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினோம்.

தேவைப்பட்டால் இந்திய நாடார்கள் பேரமைப்பு தேர்தலில் போட்டியிடும் சூழல் ஏற்படும். இது அரசியலுக்காக அல்ல, சமுதாய பாதுகாப்புக்காக தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கணேசன், நகர வர்த்தக அணி தலைவர் சார்லஸ், மாவட்ட செயலாளர் ஜான் டேவிட், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story