இந்திய நாடார்கள் பேரமைப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்
சுரண்டை அருகே இந்திய நாடார்கள் பேரமைப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தென்காசி
சுரண்டை:
சுரண்டை அருகே பரங்குன்றாபுரத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின்படி நடந்தது. முகாமுக்கு மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன் தலைமை தாங்கினார். தென்காசி நகரத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சத்யசுதாகர், மாரிசாமி, பவுல் செல்வின், அருள்ராஜ், ஆல்வின். மனோஜ் பிரபாகர், டேவிட் வின்சன், பிரதீஸ், அருண்குமார், தேவமார்ட்டின் லாரன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story