இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரசார இயக்கம்
தென்காசியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரசார இயக்கம் நடந்தது.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு முடிவின் படி தேசிய கல்விக் கொள்கை 2020- ஐ அரசு திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரசார இயக்கம் பிரசார இயக்கம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சிவஸ்ரீரமேஷ் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகையா, மாவட்ட பொருளாளர் கண்ணன், தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் முனீஸ்வரன், ரமேஷ், இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வசுந்தரராஜ், செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் மதியழகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மகளிர் செயற்குழு உறுப்பினர் ஜேனட் பொற்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் சாலமோன், தமிழ்நாடு அரசு முதுகலை ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் காளிராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், லட்சுமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாரியப்பன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவகுமார், மாடசாமி ஆகியோர் நன்றி கூறினார்கள்.