இந்திய தொழிற்சங்க சம்மேளன கூட்டம்


இந்திய தொழிற்சங்க சம்மேளன கூட்டம்
x

திருப்பத்தூரில் இந்திய தொழிற்சங்க சம்மேளன கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க சம்மேளன செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரவீந்திர நாதன், சங்கர், பி.ரவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆர்.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். ஆறுமுகம், மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழிற்சங்கங்ளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், பெரிய மற்றும் சிறிய தொழிற்சங்க தலைவர்கள் வேறுபாடின்றி ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும், மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை குறைத்து பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும், பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டங்களை அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story