ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை: பிரதமர் மோடியின் கடின உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு


ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை: பிரதமர் மோடியின் கடின உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு
x

ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றது பிரதமர் மோடியின் கடின உழைப்புக்கு கிடைத்த நல்வாய்ப்பு என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

டெல்லியில் நேற்று நடந்த ஜி20 ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாடு தொடர்பாக நடைபெறும் இந்த மிக சிறப்பான கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது நமக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இந்த தருணத்தை இந்தியர் ஒவ்வொருவரும் இதயத்தில் நினைவாக செதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இது மற்ற நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி பாராட்டி வரும் நல்ல உறவு மற்றும் அதில் அவர் மேற்கொண்டுள்ள கடின உழைப்புக்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

வாழ்த்து

இது இந்தியாவின் பிம்பத்தை உயர்த்தி உள்ளது. இது மற்றவர்களால் சாத்தியமில்லாத விஷயமாகும். அ.தி.மு.க. சார்பில் உங்களை (பிரதமர் மோடியை) நான் வாழ்த்துகிறேன். உங்கள் (மோடி) முயற்சி நல்ல வெற்றியாக அமைவதற்கு பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story