தூத்துக்குடியில் இந்திரா காந்தி நினைவு தினம்
தூத்துக்குடியில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு பீச் ரோட்டில் உள்ள இந்திராகாந்தி உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story