தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்டயத்தேர்வு
வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்களிடம் இருந்து முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழே குறிப்பிடப்பட்ட ேததிகளில் விண்ணப்பிக்குமாறும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக்கட்டணம் செலுத்துமாறு தேர்வர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு கட்டணம்
தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் முதலாம் ஆண்டுக்கு ரூ.100, 2-ம் ஆண்டுக்கு ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணமாக ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.70, சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ரூ.1,000 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பங்களை வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தில் வருகிற 15, 16-ந்ேததிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை முனைஞ்சிபட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் எஸ்தர்ராணி தெரிவித்துள்ளார்.