பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
x

பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்கள் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தங்களின் விண்ணப்பத்தை சிறப்பு அனுமதி திட்டத்தில் வருகிற 15-ந்தேதி மற்றும் 16-ந் தேதிகளில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவம், தகுதி மற்றும் பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story