கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள்
தளி அருகே கர்நாடக கார் டிரைவர் கொலையில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே கர்நாடக கார் டிரைவர் கொலையில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கார் டிரைவர் கொலை
தளி அருகே கர்நாடக மாநிலம் தொட்டதோகூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது30). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தளி அருகே உள்ள எலேசந்திரம் கிராமத்தில் ஏரிக்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே சாந்தகுமாரின் மனைவி சுஷ்மா தனது கணவரை நேபாளி மஞ்சு கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசில் புகார் செய்தார். இதனிடையே சாந்தகுமாரை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தீவிர விசாரணை
அதன் பேரில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில், தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை அவர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க ஒரு தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.