ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்


ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
x

குளச்சலில் ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

குளச்சல்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் குளச்சல் பணிமனையில் ஐ.என்.டி.யு.சி.க்கு வழங்கி வந்த தடம் எண் 88-ல் மீண்டும் பணி வழங்க கேட்டு குளச்சல் பணிமனை முன்பு ஐ.என்.டி.யு.சி. தலைவர் பாக்கிய சாந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சாந்தகுமாரன் முன்னிலை வகித்தார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பொன்ராஜா, செயல் தலைவர் ஆஞ்சலூஸ், பொதுச்செயலாளர் ஜாண் மில்டன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங் ஆகியோர் பேசினர். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முனாப், கல்லுக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகரசிங், பாலப்பள்ளம் பேரூராட்சி மன்ற தலைவர் டென்னீஸ், கவுன்சிலர் ஜெகன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மாவட்ட துணைத்தலைவர் மாகீன் மற்றும் ஐ.என்.டி.யு.சி., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story