ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நெல்லை வண்ணாா்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்க தலைவர் முருகராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மகாராஜன், பொருளாளர் சிவபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி முடித்து விட வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டெண்டர் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story