விலையில்லா சைக்கிள்


விலையில்லா சைக்கிள்
x

திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 55 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருப்புறம்பியம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு, விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் 55 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து டாக்டர் கலைஞர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் அன்பழகன் எம்.எல்.ஏ.ஆகியோரது உருவப்படத்தை ஓவியமாக வரைந்த மாணவ, மாணவியை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான எஸ்.கே.முத்துசெல்வம், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெ.சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிலம்பரசன் மற்றும் பலர் கலந்்துகொண்டனர்.


Next Story