மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்


மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரான்மலையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆதவன் வரவேற்றார். பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு 81 மாணவர்களுக்கும், 69 மாணவிகளுக்கும் என மொத்தம் 150 பேருக்கு சைக்கிள்களை வழங்கினார். முன்னதாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், அரசு வழங்கி வரும் பல நல்ல திட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றது. மாணவர்கள் திறம்பட பயிற்சி எடுத்து சிறந்த மாணவனாக பள்ளிக்கும், தமிழக அரசுக்கும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெருமை தேடித்தர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாச்சியப்பன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், பிரான்மலை வனக்குழு தலைவர் செந்தில்குமார், பிரான்மலை பரம்பரை தானம் கணக்கு ஸ்தானிகர் கற்பூர சொக்கலிங்கம், பி.எம்.பார்மஸ் பாலராமலிங்கம், அக்ரி சண்முகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story