வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்


வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரைகளில் ஆமை முட்டைகளை மர்ம நபர்கள் எடுத்து சென்றால் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வன உயிரின ஆராய்ச்சியாளர் வே ண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கடற்கரைகளில் ஆமை முட்டைகளை மர்ம நபர்கள் எடுத்து சென்றால் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வன உயிரின ஆராய்ச்சியாளர்

வே ண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆமைகள் பாதுகாப்பு முகாம்

கொள்ளிடம் அருகே கூழையார் மீனவ கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சீர்காழி வனச்சரகம் சார்பில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமை தாங்கினார். வன உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர். சிவகணேசன் கலந்து கொண்டு கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அ ப் போது அவர் கூறியதாவது:-

முட்டையிட கடற்கரைக்கு வரும்

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை அரிய வகை இனமான ஆலிவர்ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு முட்டைகள் இடுவதற்காக வரும் காலமாகும். இந்த நேரத்தில் கடற்கரையோரம் வரும் ஆமைகளை வன விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். கடற்கரைகளில் மர்மநபர்கள் ஆமை முட்டைகளை எடுத்து சென்றால் வனத்துறை அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

இதை தொடர்ந்து அழிந்து வரும் இனமாக ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். ஆமை பொரிப்பகங்கள் உள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கடற்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கடலில் கலக்காதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம், கிராம மக்கள் கோ ரிக்கை விடுத்தனர். முகாமில் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறை அதிகாரிகள். மீன்வளத்துறை அலுவலர்கள், கிராமமக்கள்,பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story