மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு 10-ந் தேதி முதல் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்


மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு 10-ந் தேதி முதல் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2023 8:42 AM IST (Updated: 7 Nov 2023 8:48 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான குறுஞ்செய்தி அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு 10-ம் தேதி முதல் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.1000 வழங்கும் திட்டத்தை மரக்காணத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ம் தேதி துவக்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




Next Story