மின்சக்தி திட்டம் தொடக்கம்
தூத்துக்குடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி திட்டம் தொடக்க விழா நடந்தது.
தூத்துக்குடியில் 75-வது சுதந்திர ஆண்டு அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்க எரிசக்தி அமைச்சகம், மின்சார அமைச்சகம், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி, 2047 என்ற திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கு.குருவம்மாள், காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற் பொறியாளர் முத்துராஜ் வரவேற்று பேசினார். ஆர்.இ.சி. பிரதிநிதி செல்வபிரபு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளர்கள் ரெமோனா, ராம்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். செயற் பொறியாளர் வெங்கடேசுவரன் நன்றி கூறினார்.