அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்


அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்
x

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.

சேலம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வானவில் மன்றம் என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் குறிப்பிட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று வானவில் மன்றம் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். சேலம் மாநகராட்சி மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகளுக்கு வானவில் மன்றத்தின் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story