மரம் முறிந்து விழுந்து தாய்- மகன் படுகாயம்


மரம் முறிந்து விழுந்து தாய்- மகன் படுகாயம்
x

மரம் முறிந்து விழுந்து தாய்- மகன் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பெருநாழி அருகே முத்திருளாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது37). இவரது தாய் நாவக்காள் (65) ஆகிய 2 பேரும் பெருநாழிக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். இவர்கள் பெருநாழி - அருப்புக்கோட்டை சாலையில் சென்ற போது திடீரென புளியமரம் ஒன்று முறிந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் தாய், மகன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த பெருநாழி போலீசார் மரத்தை அகற்றி, தாய்- மகன் 2 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story