ஆத்தூரில் வேன் மோதி காயமடைந்த முதியவர் பரிதாப சாவு


தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:37+05:30)

ஆத்தூரில் வேன் மோதி காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் முஸ்லிம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 65). இவர் நேற்று முன்தினம் காலையில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக ஆத்தூர் பஜாரில் நடந்து சென்றபோது,

அந்த வழியாக வந்த வேன் மோதி படுகாயம் அடைந்தார்.

ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வந்த அவர், நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story