விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சாவு
முத்துப்பேட்டை அருகே விபத்தில் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தார்.
திருவாரூர்
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அருகே உள்ள கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(வயது70). விவசாயியான இவர் சம்பவத்தன்று சைக்கிளில் கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.அப்போது எதிரே தொண்டியக்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னுச்சாமி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பொன்னுச்சாமி பலத்த காயமடைந்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்்சை பலனின்றி நேற்று பொன்னுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்துப்பேட்ைட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story