வீட்டில் தவறி விழுந்து காயமடைந்த விவசாயி சாவு
திருக்காட்டுப்பள்ளி அருகே வீட்டில் தவறி விழுந்து காயமடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே வீட்டில் தவறி விழுந்து காயமடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழே விழுந்தார்
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விண்ணமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது46). விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் பின் புறம் இயற்கை உபாதையைகழிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பக்கம் அடிபட்டு திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் செந்தில்குமார் சிகிச்சை பெற்றார்.
பரிதாப சாவு
பின்னர் அவர் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இது குறித்து செந்தில்குமாரின் மனைவி சுபாஷினி திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.