காயத்துடன் பறக்க முடியாமல் தவித்த கிளி மீட்பு


காயத்துடன் பறக்க முடியாமல் தவித்த கிளி மீட்பு
x
தினத்தந்தி 7 Aug 2023 1:15 AM IST (Updated: 7 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு பஸ்நிலையத்தில் காயத்துடன் பறக்க முடியாமல் தவித்த கிளியை போலீசார் மீட்டனர்.

தேனி

கடமலைக்குண்டு போலீஸ் நிலையம் அருகே பஸ்நிலையம் அமைந்துள்ளது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரிக்கு அருகே கிளி ஒன்று சத்தமிட்டு கொண்டிருந்தது. உடனே அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் லாரியின் அருகே சென்று பார்த்தனர். அப்போது லாரிக்கு கீழ்பகுதியில் கிளி ஒன்று காயத்துடன் பறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தது. இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் பஸ்நிலையத்துக்கு சென்று கிளியை மீட்டார். பின்னர் வருசநாடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வனக்காவலர்கள் பிரகாஷ், அழகர்சாமி, ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு காயம் அடைந்த கிளியை மீட்டு வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு வருசநாடு அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டுபோய் கிளியை விட்டனர்.


Next Story