அாிவாள் வெட்டில் படுகாயமடைந்த முதியவர் சாவு; மகன் கைது

அாிவாள் வெட்டில் படுகாயமடைந்த முதியவர் சாவு; மகன் கைது
x
தினத்தந்தி 6 Jun 2023 2:39 AM IST (Updated: 6 Jun 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டை அருகே அாிவாள் வெட்டில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை அருகே அாிவாள் வெட்டில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரிவாள் வெட்டு

அய்யம்பேட்டை போலீஸ் சரகம் வையச்சேரி மேல தெருவைச் சேர்ந்தவர் கருப்பையன் (வயது65). இவருடைய மகன் ரமேஷ்குமார் (37). சமீபத்தில் கருப்பையன் தான் வளர்த்து வந்த ஆடுகளை ரூ.12 ஆயிரத்துக்கு விற்றார். இது பற்றி தகவல் அறிந்த அவரது மகன் ரமேஷ் குமார் ஆடு விற்ற பணத்தை கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்தார். கருப்பையன் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் குமார் தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தனது தந்தை கருப்பையனை வெட்டினார்.

கொலை வழக்கு

இதில் படுகாயமடைந்த கருப்பையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருப்பையன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story