திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
திருச்சி மத்திய சிறையில் கைதி திடீரென இறந்தார்.
திருச்சி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நம்பிவயல் ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 35). இவர் திருவோணம் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் இது தொடர்பான வழக்கில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி, கே. கே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story