இளம் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளம் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் அகதர மதிப்பீட்டு குழுவின் சார்பில் இளம் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. விழாவில் அகதர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆசிரியர்களின் பொறுப்புகள், கடமைகள் பற்றி விளக்கி கூறினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர்களாக இயற்பியல் துறை தலைவர் பாலு, கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் கலந்துகொண்டனர். இளம் ஆசிரியர்களும், 5 வருடத்துக்கு குறைவான அனுபவம் உள்ளவர்களும் பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர்.
மேலும் அகதர மதிப்பீட்டுக்குழு விழா அமைப்பு குழுவுடன் இணைந்து சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து சரஸ்வதி பூஜையை கொண்டாடினர். மற்றும் அகதர மதிப்பீட்டு குழு மற்றும் விலங்கியல் துறையும் இணைந்து உலக சைவ உணவு நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. 50 சதவீதத்துக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக முனைவர் லிங்கதுரை பணியாற்றினார். முடிவில் அகதர மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர் சேகர் நன்றி கூறினார்.