ஐ.என்.எஸ். ராஜாளியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் விதமாக அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி ஐ.என்.எஸ். ராஜாளியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கடந்த 1971-ஆம் ஆண்டு நடந்த போரின் போது வேலூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சஹாரா பெண்கள் மற்றும் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை அரக்கோணம் ராஜாளி கடற்படை அதிகாரிகள் கவுரவித்தனர். தொடர்ந்து ராஜாளி கமாண்டிங் அதிகாரிகள் கடற்படை விமான தளத்தின் நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன்கள் பற்றிய விளக்கத்துடன் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்து சுற்றி காண்பித்தனர்.