ஐ.என்.எஸ் ராஜாளி கமாண்டிங் அதிகாரி பொறுப்பேற்பு


ஐ.என்.எஸ் ராஜாளி கமாண்டிங் அதிகாரி பொறுப்பேற்பு
x

ஐ.என்.எஸ் ராஜாளி கமாண்டிங் அதிகாரி பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை

இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்தின் முக்கிய விமானத் தளமான அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியின் கமாண்டிங் அதிகாரியாக கமோடர் கபில் மேத்தா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த கமோடர் ஆர்.வினோத் குமார், புதிதாக பொறுப்பேற்ற கபில் மேத்தாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இவர் கப்பற்படையில் பல்வேறு தலைமை, நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.என் எஸ். திரிசூல் போர்க் கப்பலில் பொறுப்பு அதிகாரியாகவும் மற்றும் ஐ.என்.எஸ். வினாஷ், ஐ.என்.எஸ். ஷிவாலிக் போர்க் கப்பல்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.


Next Story