ஐ.என்.எஸ். ராஜாளி சார்பில் ரத்ததான முகாம்


ஐ.என்.எஸ். ராஜாளி சார்பில் ரத்ததான முகாம்
x

வாலாஜாவில் ஐ.என்.எஸ். ராஜாளி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி, வாலாஜா அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் வாலாஜா அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

ஐ.என்.எஸ். ராஜாளி காமாண்டிங் அதிகாரி கமோடர் ஆர்.வினோத் குமார் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தார்.

முகாமில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படையின் விமானபடை அதிகாரிகள், வீரர்கள் அவர்களது குடும்பதினர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

115 யூனிட் ரத்தம் வாலாஜா அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர். சுஜாதாவிடம் வழங்கினர்.

தொடர்ந்து ரத்த தானம் செய்ததற்க்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story