ஜெகதாப் ஊராட்சியில்பேவர் பிளாக்-கல்வெட்டு அமைக்கும் பணிமதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜெகதாப் ஊராட்சி சவுளுக்கொட்டாய், சஞ்சீவன் கொட்டாய் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதியழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் டேம் வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பாரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட இளைஞர் பகுத்தறிவு பிரிவு துணை அமைப்பாளர் மோகன், கட்சி பிரமுகர் குமார், ஒன்றிய அவைத்தலைவர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், ஊராட்சி செயலாளர் மாதேஷ், உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.