கோவில்பட்டியில்ரூ.75 லட்சத்தில் பூச்சிக்கொல்லி மருந்துஆய்வகம் திறப்பு


கோவில்பட்டியில்ரூ.75 லட்சத்தில் பூச்சிக்கொல்லி   மருந்துஆய்வகம் திறப்பு
x

கோவில்பட்டியில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வக கட்டிடத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வக கட்டிடத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம் திறப்பு

கோவில்பட்டியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சத்தில் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம் கட்டப்பட்டது. இதனை நேற்று காலையில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கோவில்பட்டியில் ஆய்வக கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர்.

விவசாயிகளுக்கு விதைகள்

மேலும், பாண்டவர் மங்கலத்தை சேர்ந்த விவசாயி சண்முகசாமிக்கு 20 கிலோ மக்காச்சோள விதைகள், ஒரு லிட்டர் உயிர் உரம் ஆகியவை 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டது. இதே போல் வடக்குபட்டியை சேர்ந்த விவசாயி காசிராஜனுக்கு 20 கிலோ உளுந்து விதைகள், ஒரு லிட்டர் உயிர் உரம் ஆகியவை 50 சதவீத மானியத்திலும், ஈராச்சியை சேர்ந்த விவசாயி கருப்பசாமிக்கு 50 பனை விதைகள் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் உதவி கலெக்டர் க.மகாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஜெயசெல்வின், துணை இயக்குநர் பழனிவேலாயுதம், உதவி இயக்குநர் நாகராஜ் பலர்


Next Story