பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்மநபர்கள்
வடக்கு இலந்தைக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்மநபர்களை போலீசார்தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர். அங்கு அலுவலக கண்ணாடி டேபிள் மேல் வைத்து பட்டாசு வெடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏதும் நிகழவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கணபதி கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பட்டாசு வெடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story