தேனி அருகே வீட்டுக்குள்பிணமாக கிடந்த பருத்தி வியாபாரி


தேனி அருகே வீட்டுக்குள்பிணமாக கிடந்த பருத்தி வியாபாரி
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பூட்டிய வீட்டுக்குள் பருத்தி வியாபாரி பிணமாக கிடந்தார்.

தேனி

தேனி சுப்பன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53). பருத்தி வியாபாரி. இவர் குடும்பத்துடன் பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்தார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். சிவக்குமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவருடைய தந்தை பரமசிவம் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் சிவக்குமார் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story