விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமையில் சி.ஐ.டி.யு.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய, மாநில துறைகளில் உள்ள காலி பணிகளை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நடை பயணத்தில் சி.ஐ.டி.யு. மாநில துணை பொதுச்செயலாளர் திருச்செல்வம், மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story