சலவை பட்டறைகளை திறக்க வலியுறுத்தி கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம்
ஆண்டிப்பட்டி அருகே சலவை பட்டறைகளை திறக்க வலியுறுத்தி கஞ்சித் தொட்டி திறப்பு போரட்டம் நடத்தப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர்
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சலவை பட்டறைகள் உள்ளன. இந்த சலவை பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதாக கூறி சலவை பட்டறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் பட்டறைகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சலவை பட்டறைகளை திறக்க கோரி தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சலவை பட்டறைகளை திறக்க வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் அயனிங் செய்பவர்கள், நெசவாளர்களும் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story